வித்தியா படுகொலை குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குற்றவாளிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கே முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து, பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்ற மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன், அதிலும், பாதாள உலகக் குழுவை குறிவைத்து இந்த தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மறைப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.#ut #utnews #tamilnews #universaltamil #lka com/universaltamil

Contact us – [email protected]