விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சு பதவி

விஜயகலா மகேஸ்வரனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், தாய் என்ற ரீதியில் சிறுமியின் நிலையை கேள்விப்பட்டு தன்னை அடக்கிகொள்ள முடியாத நிலையில் விஜயகலா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் தவறு இல்லை என்றும், இராஜங்க அமைச்சு பதவியை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]