வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் பூசை இடம்பெற்று இன்று திங்கட்கிழமை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், நாளை செவ்வாய்கிழமை அதிகாலை தீமிதிப்பு மற்றும் தீர்த்த உற்சவம் நடைபெற்று சடங்கு உற்சவம் நிறைவு பெறும்.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றும் முகமாக எடுத்து வந்த மடிப்பிச்சையை அம்பாளுக்கு வழங்கி வைத்தனர்.

இச்சடங்கு கால உற்சவ பூசைகள் யாவூம் ஆலய பிரதம குருவூம், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]