வாள் முனையில் சுமார் 15 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை – மீசாலையில் சம்பவம்

மீசாலையில் சம்பவம்

மீசாலையில் சம்பவம்

தென்மராட்சி மீசாலையில் புகையிரத வீதிக்கு அருகில் உள்ள வீட்டில் சுமார் 15 லட்சம் பெறுமதியான 26 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை நள்ளிரவு மீசாலையில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று சாவகச்சேரியில் இடம்பெறும் திருமணம் ஒன்றிற்காக வவுனியாவில் இருந்து உறவினர்கள் வருகைதந்து குறித்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு வாள்களுடன் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை வாள்முனையில் அச்சுறுத்தி அவர்களின் 15 லட்சம் பெறுமதியான சுமார் 26 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்தவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை கொள்ளைச்சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சாவகச்சேரி பொலிஸாருடன் சென்ற தடயவியல் பொலிஸார் அங்கிருந்த தடயங்களை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்மாவட்டத்தில் தொடர்ச்சியாக வாள்முனையில் அச்சுறுத்தி கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]