வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணத்துறை பணியகத்தின் கடமையாற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தில் முதன் முதலாக சுற்றுலாப் பயணத்துறை பணியகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், கடமையாற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்களும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது.

கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 07 இந்த அலுவக அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சரும், வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுலாப் பயணத்துறை பணியக அங்குரார்ப்பண நிகழ்வின் போது, பணியகத்தின் தலைவாக ஓய்வுநிலைப் பேராசிரியர் சிவராஜா நியமிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாணத்தில் சுற்றுலாப் வடமாகாணத்தில் சுற்றுலாப்

இதன்போது, சுற்றுலாப் பயணத்துறை பணியகத்தின் முதலாவது உத்தியோக பூர்வ கலந்துரையாடலையும் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உட்பட வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், உட்பட வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் கேதீஸ்வரன் மற்றும் சுற்றுலாப் பயணத்துறை பணியகத்தின் உறுப்பினர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]