ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்த முடியாது – பந்துல

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து செல்வதை இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துளளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிட நேரிடும் என, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]