யாழ்தேவிக்கு கிடைத்துள்ள கௌரவம்

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி ரயில் சேவை உலகின் மிகச் சிறந்த 18 ரயில் பயணங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டன் கார்டியன் நாளிதழ், உலகின் மிகச்சிறந்த 18 ரயில் மார்க்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் ஒன்றாக யாழ்தேவி இடம்பெற்றுள்ளது.

“ஏழு மணித்தியாலங்கள் கொண்ட யாழ்தேவியின் பயணத்தில், தாமதங்கள் ஏற்படுவது வழக்கம். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டுகள் 30 நாட்களுக்கு முன்னர் தொடக்கம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இணையமூலம் முன்பதிவுகள் இல்லை.

பெரிய சாளரங்களின் மூலம், உலர்ந்த பசுமையான காட்சிகளையும் பிரகாசமான கோவில்களையும் காண முடியும்.” என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]