‘மரணதண்டனை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் சிறப்பானது’

மரணதண்டனை

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானமானது நாட்டு மக்களின் சிறப்பான வாழ்க்கைக்கு காரணமாக அமையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானமானது, இதற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல் செய்யும் அறிவிப்பை, இலங்கை அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com