மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் வேட்டைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (24) மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதனைப்பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் வருகைதந்திருந்தனர்.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி, சபரிமலை குரு முதல்வர், ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் வேட்டைத்திருவிழாவினை நடாத்தினார்.

கடந்த 16 ஆந்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 27.06.2018 ஆந்திகதி புதன்கிழமையன்று களுவன்கேணி சமுத்திரத்தில் நடைபெறும் தீர்த்த உட்சவத்துடன் நிறைவுபெறுமென வேட்டைத்திருவிழா இணைப்பாளர் கே. கமலேஸ்வரன் தெரிவித்தார்.

பக்திமுக்தி உற்சவம், வேத மற்றும் திருமுறை பாராயணம், சர்வ அலங்கார உற்வசம், தீபஜோதி உற்சவம், வசந்த உற்சவம், நவசக்தி அர்ச்சணை, திருவிளக்குப்பூசை மற்றும் சப்புறத்திருவிழா போன்ற கிரியைகள் இங்கு நடைபெறுகின்றன