பொலிஸ் இடம்பெயர்சேவை நிறைவு

பொலிஸ்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸாரினால் பதுளை வீதியை அண்டியுள்ள பிரதேச மக்களின் நலனுக்காக கோப்பாவெளிப் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு கடந்த 45 தினங்களாக இயங்கி வந்த பொலிஸ் சேவை செவ்வாய்க்கிழமையுடன் 10.07.2018 நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர் பொலிஸ் சேவை நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அங்கு சமயத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸ் பிராதானிகள் கலந்து கொண்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேசத்தின் வறிய மாணவர்களுக்கு பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்;பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் என்.ஏ. மென்டிஸ், கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, டி.எம்.ஏ. சமரகோன், கோப்பாவெளி பொலிஸ் இடம்பெயர் சேவை நிலைய பொறுப்பதிகாரி ஜே.எம். பியசேன, கோப்பாவெளி இராணுவ முகாமின் இணைப்பதிகாரி கப்டன் லியனகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொலிஸ் பொலிஸ்

ஒன்றரை மாத கால பொலிஸ் இடம்பெயர் சேவையின் மூலம் பதுளை வீதியயை அண்டிய தொலைதூரப் பிரதேச மக்கள் பெரும் நன்மையடைந்ததாகவும் மேலும் பொது இடங்களில் சிரமதானங்கள் பாடசாலைகளுக்கிடையில் விளையாட்டுப் உள்ளிட்ட பொலிஸ் பொதுமக்கள் உறவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடிந்ததாகவும் கோப்பாவெளி பொலிஸ் இடம்பெயர் சேவை நிலைய பொறுப்பதிகாரி ஜே.எம். பியசேன தெரிவித்தார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]