புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் கரும்புலிகள் தின நிகழ்வுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கரும்புலிகள் தின நிகழ்வுகள் வாகரை கதிரவெளி பிரதேசத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளர் எம்.புவிதரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்பாளர் இ.வசந்தபாபு மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள், போராளிகள் குடும்பத்தினர் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவீரரான கரும்புலிகளின் நினைவாக கடற்புலி மாவீரர் விநாயகம் இளையதம்பி அவர்களின் தயாரான விநாயகம் தவமணி அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவரினாலும் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கதிரவெளி பிரதேசத்தில் கடற்புலி மாவீரரான விநாயகம் இளையதம்பி (மேஜர் கண்ணாளன்) அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளரினால் கரும்புலிகள் தின கவிதையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

இதே போன்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினால் கரும்புலிகள் தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]