புதையல் தோண்டிய 6பேர் கைது

சிலாபம் – இனிகொடவெல பிரதேசத்தில் வீட்டுத்தோட்டமொன்றில் கிணறு வெட்டுவதாக தெரிவித்து புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் முந்தலம் – வில்பத்து மற்றும் சிலாபம் – மெரவல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]