பந்து வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோய்ன் போதைபொருளை வெலிக்கடை சிறைச்சாலைக்குள் வீசிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பந்து ஒன்றுக்குள் ஹெரோய்ன் போதைபொருளை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன இந்த தீர்ப்பினை இன்று வழங்கியுள்ளார்.

பொரளை, சீவலி மாவத்தையை சேர்ந்த ஹிருனி அல்விஸ் எனும் 33 வயதுடைய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி சிறைச்சாலைக்குள் போதைபொருளை வீசியதாக, சட்டமா அதிபரினால் குறித்த பெண் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com