பிரான்சில் நடைபெறும் 71 வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி நடிகைகள் கலந்துக் கொண்டனர்.

நடிகைகள் சல்மா ஹயக், கேட் பிளான்செட், கிறிஸ்டின் ஸ்டீவர்ட், மாரியன் காட்டிலார்ட் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பங்கேற்றனர்.

இந்த அரங்கில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் தந்து பரபரப்பை ஏற்படுத்திய 82 நடிகைகள் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட படிக்கட்டுகளில் ஏறினர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களின் ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண் கலைஞர்களுக்கான இந்த விசேஷ அரங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பட்டாம் பூச்சியைப் போல வண்ண ஆடையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இவ் பட்டாம்பூச்சி ஆடையை வடிவமைக்க கிட்டத்தட்ட 3000 மணித்தியாளங்கள் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

டுபாயை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Michael Cinco இதனை வடிவமைப்பதற்கு இந்த அளவு நேரத்தினை செலவிட்டுள்ளார்.

ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் மற்றும் பிரஞ்சு தட்டுகள் இந்த ஆடைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் அது அதி-ஊதா, நள்ளிரவு நீலம் மற்றும் சிவப்பு நிற நூல் வேலைகளை கொண்டு இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Cannes திரைப்பட விழாவுக்காக இந்த ஆடை தயார்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில் பட்டாம்பூச்சி ஆடையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]