பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.

இத்தாலியில் நேப்பிள்ஸ் நகருக்கு 1880-ல் மகாராணி மார்க்ரேட் வருகை புரிந்தார். அப்பொழுது மக்கள் மனநிறைவோடு அவருக்கு விதவிதமான பரிசுகள் தர முயன்றன. நேப்பிள்ஸ்-ன் பிரபலமான உண்வக சமையல்காரர் ஒருவர், வித்தியாசமான பரிசினை தர நினைத்தார். பதப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான ரொட்டியின் மீது இத்தாலி தேசிய கொடியின் மூவர்ணங்களான சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகியவற்றை பிரதிபலிக்கும் காய், கனி வகைகளை கொண்டு சமைத்து அவருக்கு பரிமாற வேண்டும் என தீர்மானித்தார்.

அதன்படி சிவப்புக்காக தக்காளித் துண்டுகளையும், வெள்ளை நிறத்துக்காக வெண்ணையையும்ச், பச்சை நிறத்துக்காக துளசி இலைகளையும் கொண்டு ஒரு புதிய பதார்த்தத்தை படைத்தார். அதுதான் பீட்சாவாக பிரபலமானது. காலப்போக்கில் பீட்சா பல காய், கானிகள் மற்றும் விதவிதமான சுவைகளில் தயாரிக்கப்பட்டது
ஒரு நாள் தன் கணவரோட நகர்வலம் வரும்போது ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையான சப்பாத்தி போன்ற ஒன்றைப் பார்த்த ராணிக்கு அந்த ஏழையின் ரொட்டி மேல் ஒரு அல்ப ஆசையாம்! வாங்கிச் சாப்பிட்டு மிகவும் பிடித்து விட, அரண்மணை சமையல்காரருக்கு ஆணை பிறப்பித்து விட்டார் – ‘எனக்கு தினமும் இது வேணும்!’. அவரும் சரியான ஜால்ரா பேர்வழி போல – ரொட்டியை தயார் செய்து, அதன் மேலே தக்காளி, துளசி, பாலாடைக் கட்டி ஆகியவை கொண்டு இத்தாலி நாட்டு கொடி போல செய்து, அதற்கு ”MARGHERITA PIZZA” எனப் பெயரும் வைத்து விட்டாராம்.pizza

ராணியே விரும்பி சாப்பிடற உணவுன்னு இந்த பீட்சா புகழ் எல்லோருக்கும் பரவ ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, போன்ற நாடுகளுக்கும், கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பீட்சா புகழ் பரவ ஆரம்பித்து, இன்று பட்டி தொட்டிகளில் கூட பீட்சா கிடைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இட்லியும் கெட்டிச் சட்னியும் வெச்சு அடிச்சவர்கள் கூட இன்று பீட்சாவும் பர்கரும் கேட்கிறார்கள். ”இட்லி போரும்மா” என்று சொல்லும் குழந்தைகளைத் திருப்திப்படுத்த, “பீட்சா இட்லி செய்வது எப்படி?” ந்னு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த பீட்சா சாப்பிடறவங்க தவிர எல்லார் வாயிலும் அடிபடுது. அதுவும் இந்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு பீட்சான்னா திருநெல்வேலி அல்வா மாதிரி. பீட்சா பத்தி நிறைய பேசறாங்க! தொலைக்காட்சியில் லியோனி தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் சொன்னது – ‘இப்ப குளிர் காலம். துணியெல்லாம் காயாது. நீங்க நிறைய கொடி கட்ட வேண்டியிருக்கும். அதுக்கு கம்பியெல்லாம் வாங்க வேண்டியதில்லை. ஒரு பீட்சா வாங்குங்க போதும். இங்கே இழுக்க ஆரம்பிச்சு அடுத்த கம்பம் வரை இழுத்து கட்டிட்டா, துணி உலர்த்தலாம்!”

அதை விட இன்னுமொரு உதாரணம் – சமீபத்தில் தில்லியில் பொங்கல் விழா பட்டி மன்றத்தில் ஒரு பேச்சாளர் பீட்சா பற்றி சொன்னது – முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா – பீட்சா பிரியர்களிடம் சொல்லிடறேன் – இதை படிக்காதீங்க என்று – “இந்த பீட்சா-வப் பார்த்தா முப்பத்தி ஐந்து பேர் சேர்ந்து மூக்கு சிந்தினா மாதிரி இருக்கு” என்கிறார்.

நம்ம தான் அப்படின்னா, உலகளவுல பீட்சா பல ஜோக்குகளுக்கு காரணகர்த்தா. கம்பெனி முதலாளி கம்பெனிக்குள்ள வந்துட்டு இருந்தாராம். வாசல்ல ஒரு பையன் சும்மா நின்னுட்டு இருந்தானாம். அவனைப் பார்த்து ‘உனக்கு எவ்வளவு சம்பளம்”னு கேட்டாராம் முதலாளி. அவன் சொன்னானாம் – ”வாரத்துக்கு பத்து டாலர்”னு. ”இந்தா முப்பது டாலர்” – வெளியே போ. சும்மா நிக்கறதுக்கா உன்னை வேலைக்கு வெச்சேன்” அப்படின்னு கேட்டு அனுப்பினாராம். அதை மத்த தொழிலாளிகள் பார்க்க, “சும்மா இருந்தா உங்களுக்கும் இதே தான்!” அப்படின்னு எச்சரித்தாராம். அப்புறம், தொழிலாளி கிட்ட கேட்டாராம், ‘வெளியே அனுப்பின தொழிலாளி பேர் என்ன” என்று. அதற்கு அந்த தொழிலாளி சொன்ன பதில் – ‘அவர் பேர் எல்லாம் தெரியாது. ஆனா அவர் பீட்சா டெலிவரி பண்ண வந்தவர்” அப்படின்னு!