தினேஷ் சந்திமலுக்கு போட்டித்தடையுடன் அபராதம்

தினேஷ் சந்திமலுக்கு

தினேஷ் சந்திமலுக்கு போட்டித்தடையுடன் அபராதம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியாக புகார் கிளம்பியது. காணொளியில் அவர் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு மறு கையினால் பொக்கெட்டுக்குள்ளிருந்து ஏதோவொன்றை எடுத்து வாயில் மென்று, பின் பந்தின் மீது தடவுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பந்தைச் சேதப்படுத்தியதற்காக தினேஷ் சந்திமால் இரு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது போட்டியினை இரண்டு மணிநேரம் தாமதப்படுத்தியதற்காக போட்டியின் சம்பளத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளரான ஹத்துருசிங்கே மற்றும் மனேஜர் குருசிங்க ஆகியோருக்கும் போட்டியினைத் தாமதப்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுடனான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் சந்திமால் விளையாடுவதற்கு தடை என்பதால் இலங்கை பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]