‘ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ மேக்கிங் வீடியோ

விஜய்யின் ‘வனமகன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தின் கதைக்களம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிட்ச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டது. ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடித்திருந்தார். மேலும், ‘ஜெயம்’ ரவியின் மகன் ஆரவ்வும் நடித்திருந்தார். டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]