ஜம்பெட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – Updated

ஜம்பெட்டா வீதியில்

ஜம்பெட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு ஜம்பெட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 58 வயது மதிக்கத்தக்க ஆணொருவரும், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட இருவரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]