சீனா வழங்கிய நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில்?

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அதிகாரபூர்வமாக விசாரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். “நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை இலங்கை எழுப்பியுள்ளது. ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு சீனாவிடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கிடைத்ததாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதன் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்தப் பணம் வைப்பிலிடப்பட்டது பற்றிய தகவல்
அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]