கொழும்பின் பதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெறுகின்ற துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்காக நகரில் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குற்றவாளிகளை இனங்கண்டு கைதுசெய்யும் நடவடிக்கைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]