கூலித்தொழிலாளியின் குரலில் தன்னையே மறந்துப்போன கமல்ஹாசன் – வீடியோ உள்ளே

விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒருவர் பாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது.

வைரலான இந்த வீடியோ ‌ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது.

அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ‌ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது.

கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது.

யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த காந்தக்குரலோன் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது.

ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்யும் உன்னி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பாடலை பாடியதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ராகேஷ் உன்னி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்துள்ளார்.

அவர் முன்னிலையிலும் தனது குரல் வித்தையை ராகேஷ் உன்னி காட்ட, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]