கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கு தடை

நாளை இடம்பெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தேர்தலை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை நடத்தாதிருக்குமாறு தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த போதும் அது பிற்போடப்பட்டது.

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவை தொடர்ந்து மே மாதம் 31 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]