காணாமல் போனோர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் 500வது நாளை முன்னிட்டு உணவு தவிர்ப்பு

யாழ்ப்பாணம்,

காணாமல் போனோரிகளின் உறவுகளைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் 500வது நாளை முன்னிட்டு காணாமல் போனோரிகளின் உறவுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னபாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கணடறியும் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை 07 காலை 9.00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

நுல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் தமது உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின் போது, கடந்த 500 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்து தருமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்த உறவுகள் தமக்கு காணாமல் போனோர் அலுவலகம் தேவையில்லை என்றும், தாம் கடவுளை நம்பியே தமது உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

நுல்லாட்சி அரசாங்கத்தினையும் நம்ப முடியாது. தாம் கடவுளை நம்பியே தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம் .
எனவே, கடவுள் தான் நீதியை வளங்க வேண்டுமென்றும், அந்த நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் பின்னர் மாலை நல்லூர் ஆலயத்தில் தேங்காங் உடைத்தும், கற்பூரச் சட்டி எந்தியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அவ்வேளை, தமிழர்ககுகு நிர்ந்தரமான ,சுத்திரமான , பாதுகாப்பான தீர்வை அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றுத்தர ஆணையிடுவதாகவும் காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]