‘எரிபொருள் விலைச் சூத்திரத்தை வெளிப்படுத்த வேண்டும்’

எரிபொருள் விலை

எரிபொருள் தொடர்பான விலைச் சூத்திரத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாதுள்ள பொது மக்களுக்கு தற்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் விலைச் சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை அதிகரிப்பதாக இருந்தால் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளமும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் வகையிலான முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com