உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு

உணவுகளின் விலை

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை முன்வைத்து உணவுகளின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நுகர்வோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

12.5 கிலோகிராம் சமயல் எரிவாயுவில் விலை 245 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சோறு பொதியின் விலை 10 ரூபாயால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சோறு பொதியின் விலையை 10 ரூபாயால் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]