இன்று முதல் காலநிலையில் மாற்றம்

நாட்டில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும், நாட்டின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மதியம் மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]