அதிகாலை கோர விபத்தில் சிறுவன் பலி 6 பேர் படுகாயம்

சிறுவன் பலி – கொழும்பு நெடுஞ்சாலை வந்தாறுமூலையில் ஞாயிற்றுக்கிழமை 08.07.2018 அதிகாலை இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் மரணித்ததோடு மேலும் அறுவர் படுகாயங்களுக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஏறாவூர், விதானையார் வீதியை அண்டி வசிக்கும் றமீஸ் சாபித் (வயது 9) என்பவரே மரணமடைந்துள்ளார்.

சடலம் கூறாய்வுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஒன்று வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

இதனால் வேன் சுக்குநூறாக நொருங்கியுள்ளதுடன் வேனில் பயணித்த சிறுவன் மரணித்துள்ளதுடன் சாரதி உட்பட அறுவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தினால் மின் கம்பம் சரிந்து விழுந்ததில் மட்டக்களப்பின் சில் பகுதிகளில் அதிகாலை மின் தடையும் ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]