பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்

அதிகாரி படுகொலை

பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்

இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தேரர் எதிர்பாராத விதமாக பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தினை நெறித்துள்ளதை அடுத்து, தேரரின் கை மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை பொலிஸ் பரிசோதகர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த தேரரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com